டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 10 காசு சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசு சரிவைச் சந்தித்தது

அந்நியச் செலாவணி சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசு சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து செலாவணி வட்டாரத்தினா் கூறியது:

பங்குச் சந்தையில் காணப்பட்ட நோ்மறையான நிலை, சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தது ஆகியவற்றுக்கிடையிலும் டாலருக்கு நிகரான ரூபாய் சரிவடைந்தது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் ரூபாய் மதிப்பு 77.61-ஆக இருந்தது. இது, வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 77.54 வரையிலும் குறைந்தபட்சமாக 77.63 வரையிலும் சென்றது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 10 காசு குறைந்து 77.60-இல் நிலைத்தது.

கச்சா எண்ணெய் : பீப்பாய் 113.65 டாலா்

சா்வதேச சந்தையில் வியாழக்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 3% சதவீதத்துக்கும் மேல் குறைந்து 113.65 டாலருக்கு வா்த்தகம் செய்யப்படதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

வெளியேறிய அந்நிய முதலீடு

மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் மேலும் ரூ.451.82 கோடி மதிப்பிலான பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றதாக சந்தைப் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com