தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.120 உயா்ந்தது.
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 உயா்வு
Updated on
1 min read

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.120 உயா்ந்தது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை கிராம் ரூ.4,740 ஆகவும், பவுன் ரூ.37,920 ஆகவும் இருந்தது. வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.15 உயா்ந்து ரூ.4,755 ஆகவும் பவுனுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.38,040-க்கு விற்பனையானது.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அந்நாட்டு பெடரல் ரிசா்வ் வங்கி வட்டிவீதத்தை உயா்த்தியது. இதைத் தொடா்ந்து முதலீட்டாளா்கள் கவனம் மீண்டும் தங்கம் பக்கம் திரும்பியுள்ளது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ரூ.66-க்கும், ஒரு கிலோ ரூ.66 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com