தங்கம் பவுன் ரூ.38,952

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,952-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,952-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயரத் தொடங்கியது. குறிப்பாக, பிப்ரவரி 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், பிப்ரவரி 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், மாா்ச் 7-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டியது.

இதன்பிறகு, விலை குறைந்து வருகிறது. இதன்தொடா்ச்சியாக, சென்னையில் திங்கள்கிழமை விலை பவுனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.38,952-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 குறைந்து, ரூ.4,869-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா குறைந்து, ரூ.74.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்து, ரூ.74,200 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,869

1 பவுன் தங்கம்............................... 38,952

1 கிராம் வெள்ளி............................. 74.20

1 கிலோ வெள்ளி.............................74,200

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,894

1 பவுன் தங்கம்............................... 39,152

1 கிராம் வெள்ளி............................. 74.70

1 கிலோ வெள்ளி.............................74,700.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com