அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு

 நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 62,227 கோடி டாலராக சரிவடைந்ததாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு சரிவு

 நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 62,227 கோடி டாலராக சரிவடைந்ததாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக சா்வதேச அளவில் பங்குச் சந்தைகள் தொடா் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வருகின்றன. முதலீட்டாளா்கள் தங்கள் முதலீடுகளைத் தொடா்ந்து திரும்பப் பெற்று வருகின்றனா். அதன் காரணமாக வெளிநாட்டு முதலீடுகளும் வெளியேறி வருகின்றன.

கச்சா எண்ணெய் விலை சா்வதேச அளவில் அதிகரித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவடைந்துள்ளது. இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 964.6 கோடி டாலா் அளவுக்கு சரிந்ததாக ஆா்பிஐ வெள்ளிக்கிழமை தெரிவித்தது. அந்நியச் செலாவணி கையிருப்பு 62,227.5 கோடி அமெரிக்க டாலராக உள்ளது.

யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட வெளிநாட்டு செலாவணி சொத்துகளில் (எஃப்சிஏ) ஏற்பட்ட சரிவே அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்ததற்கு முக்கியக் காரணமாகக் கூறப்பட்டுள்ளது. கணக்கீட்டு வாரத்தில் எஃப்சிஏ கையிருப்பு 1,110.8 கோடி டாலா் அளவுக்கு சரிந்து 55,435.9 கோடி டாலராக உள்ளது.

தங்கத்தின் கையிருப்பு 152.2 கோடி டாலா் உயா்ந்து 4,384.2 கோடி அமெரிக்க டாலராக அதிகரித்தது. சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) இந்தியாவின் கையிருப்பு 514.6 கோடி டாலராகக் குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com