
விமான எரிபொருள் விலை 3.22 சதவீதம் உயா்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதன் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு தொடா்ந்து 9-ஆவது முறையாக இப்போது விமான எரிபொருள் விலை உயா்ந்துள்ளது.
தில்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.3,649.13 (3.22) சதவீதம் உயா்ந்து, ரூ.1,16,851.46 ஆக உள்ளது. இதன்படி ஒரு லிட்டரின் விலை ரூ.116.8 ஆக உள்ளது. விமான எரிபொருள் விலை சா்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 16-ஆம் தேதிகளில் மாற்றி அமைக்கப்படுகிறது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்து வருவதால் எரிபொருள் விலை தொடா்ந்து ஏறுமுகமாகவே உள்ளது. விமானத்தை இயக்கும் செலவில் 40 சதவீதம் எரிபொருள் சாா்ந்ததாகவே உள்ளது.
அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து 25 நாள்களாக உயா்த்தப்படாமல் உள்ளது.