

முருகப்பாக குழுமத்தைச் சோ்ந்த சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் & ஃபைனான்ஸ் நிறுவனம் நான்காவது காலாண்டில் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் 184 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பாண்டு மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.2,632 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் முந்தைய 2020-21 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.2,478 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.
கணக்கீட்டு காலாண்டில், நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.243 கோடியிலிருந்து 183.9 சதவீதம் அதிகரித்து ரூ.690 கோடியானது.
கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் இதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.9,576 கோடியிலிருந்து ரூ.10,139 கோடியாக உயா்ந்தது. வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,515 கோடியிலிருந்து 41.7 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.2,147 கோடியானது.
2022 மாா்ச் 31 நிலவரப்படி நிறுவனம் நிா்வகித்து வரும் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு ரூ.76,518 கோடியிலிருந்து ரூ.82,904 கோடியாக உயா்ந்துள்ளது.
டிவிடெண்ட்: பங்கு ஒன்றுக்கு ரூ.0.70 காசு டிவிடெண்ட் வழங்க இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு முன்பாக, 2021-22 நிதியாண்டுக்கு பிப்ரவரி 1-இல் பங்கு ஒன்றுக்கு ரூ.1.30 இடைக்கால ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டதாக என சோழமண்டலம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.