உச்சத்திற்குப் பிறகு தொடர்ந்து சரியும் சென்செக்ஸ்

வாரத்தின் இரண்டாவது பாதியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

வாரத்தின் இரண்டாவது பாதியில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் தொடர் சரிவைச் சந்தித்து வருகின்றன. 

வாரத்தின் தொடக்கத்தில் ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸ் நவ. 15, 16 ஆகிய தேதிகளில் புள்ளிப் பட்டியலில் உச்சத்தை அடைந்தது. சர்வதேச பங்குகளின் விற்பனை நேர்மறையாக இருந்ததால், உள்ளூர் சந்தையின் பங்குகளும் ஏறுமுகத்தில் காணப்பட்டன.

ஆனால், கடந்த இரு நாள்களாக இந்திய பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைகிறது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்87.12   புள்ளிகள் சரிந்து 61,663.48 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது (0.14 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 36.25 புள்ளிகள் சரிந்து 18,307.65 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.20 சதவிகிதம் சரிவாகும். 

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தர பங்குகளில் 10 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே விற்பனையாகி நேர்மறையாக இருந்தன. ஏனைய 20 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

அதிகபட்சமாக என் & எம், மாருதி சுசூகி, பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com