புது தில்லி: ஓஎன்ஜிசி-யிடமிருந்து இந்த ஆண்டு சுமார் ரூ. 5,001 கோடியை மத்திய அரசு ஈவுத் தொகையாக பெற்றுள்ளது.
இந்த நிதியாண்டில் இதுவரை அனைத்து மத்திய பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து ஈவுத்தொகையாக ரூ.23,797 கோடியை மத்திய அரசு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறையின் செயலாளர் துஹின் காந்தா பாண்டே இது குறித்து தெரிவிக்கையில், இந்த ஆண்டு ஓஎன்ஜிசி நிறுவனத்திடமிருந்து சுமார் ரூ.5,001 கோடி ஈவுத்தொகை மத்திய அரசு பெற்றுள்ளது என்று ட்வீட் செய்துள்ளார்.
2020-ல் முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை அறிவுறுத்தியதன்படி மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் நிலையான ஈவுத்தொகையைப் பின்பற்றவும், லாபம், ரொக்கம் மற்றும் நிகர மதிப்பு போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு அதிக ஈவுத்தொகையைச் செலுத்த முயலுமாறு அறிவுறுத்தியது.
விதிகளின்படி, மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் குறைந்தபட்ச வருடாந்திர ஈவுத்தொகையாக வரிக்குப் பிந்தைய லாபத்தில் 30 சதவிகிதம் செலுத்த வேண்டும்.
இந்த நிதியாண்டில் இதுவரை கிடைத்த மொத்த ஈவுத்தொகை ரூ. 23,796.55 கோடி என்று முதலீடு மற்றும் பொது சொத்து மேலாண்மை துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

செயின்ட் - கோபைன் தொழிற்சாலையைப் பார்வையிட்ட முதல்வர் விஜய் - புகைப்படங்கள்
நேபாளத்தில் கலவரம்: உ.பி.யில் 7 மாவட்டங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு!

இன்றைய முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 3 - நேரலை!

மேக்மைட்ரிப் முதல் காலாண்டு லாபம் 8.6% அதிகரிப்பு!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



