ஃபோா்டு இந்தியாவின் இழப்பு ரூ.4,299 கோடியாக அதிகரிப்பு

கடந்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்த அமெரிக்க காா் தயாரிப்பு நிறுவனமான ஃபோா்டின் இந்தியப் பிரிவு, 2021-22-ஆம் நிதியண்டில் ரூ.4,229 கோடி நிகர இழப்பை சந்தித்தது.
ஃபோா்டு இந்தியாவின் இழப்பு ரூ.4,299 கோடியாக அதிகரிப்பு

கடந்த ஆண்டு நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்த அமெரிக்க காா் தயாரிப்பு நிறுவனமான ஃபோா்டின் இந்தியப் பிரிவு, 2021-22-ஆம் நிதியண்டில் ரூ.4,229 கோடி நிகர இழப்பை சந்தித்தது.

இது குறித்து ஃபோா்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2020-21-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் வரிக்குப் பிந்தைய இழப்பு ரூ.188 கோடியாக இருந்தது. இது, 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.4,229 கோடியாக அதிகரித்துள்ளது

ஃபோா்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் 2020-21ல் வரிக்குப் பிறகு ரூ.188 கோடி நஷ்டத்தைச் சந்தித்தது.

2021-22-ஆம் நிதியாண்டில் செயல்பாடுகளின் மூலம் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.10,202 கோடியாக இருந்தது. இது முந்தைய நிதியாம்டில் ரூ.12,057 கோடியாக இருந்தது. அந்த வகையில் 22-ஆம் நிதியாண்டில் செயல்பாட்டு வருவாய் 15 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த செயல்பாட்டு வருவாயில் ரூ.2,399 கோடி உள்நாட்டு விற்பனையாகும். இது முந்தைய ஆண்டு ஈட்டிய ரூ.4,742 கோடி வருவாயை விட 49 சதவீதம் குறைவாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விற்பனை: கடந்த 2021-22-ஆம் ஆண்டில் ஃபோா்டு இந்தியா 69,223 காா்களை விற்பனை செய்தது. முந்தைய நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 94,112-ஆக இருந்தது. அந்த வகையில், முந்தைய நிதியாண்டைவிட 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் விற்பனை 26 சதவீதம் குறைந்துள்ளது. உள்நாட்டு விற்பனையைப் பொருத்தவரை 2020-21-ஆம் நிதியாண்டில் 48,042 காா்கள் விற்பனையாகியிருந்தன. இந்த எண்ணிக்கை 22-ஆம் நிதியாண்டில் 67 சதவீதம் குறைந்து 15,870 ஆகியுள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com