
ஒன்றரை ஆண்டுகள் இல்லாத அளவாக, கடந்த செப்டம்பரில் மொத்த விலை பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) 10.7 சதவீதமாக சரிந்தது.
இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு செப்டம்பரில் மொத்த விலை பணவீக்கம் 11.8 சதவீதமாக இருந்தது. இது இந்த ஆண்டு செப்டம்பரில் 10.7 சதவீதமாக சரிந்தது. ஒன்றரை ஆண்டுகள் இல்லாத அளவாக, கடந்த செப்டம்பரில் மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு செப்டம்பரின் பணவீக்கத்துக்கு தாது எண்ணெய்கள், உணவுப் பொருள்கள், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனம் மற்றும் ரசாயன பொருள்கள், மின்சாரம், ஜவுளி உள்ளிட்டவை முதன்மையாகப் பங்களித்துள்ளன.
கடந்த ஆகஸ்டில் உணவுப் பொருள்கள் மீதான பணவீக்கம் 12.37 சதவீதமாக இருந்த நிலையில், இது செப்டம்பரில் 11.03 சதவீதமாக குறைந்தது. எனினும் ஆகஸ்டில் காய்கறிகள் மீதான பணவீக்கம் 22.29 சதவீதமாக இருந்த நிலையில், இது செப்டம்பரில் 39.66 சதவீதமாக அதிகரித்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...