உச்சத்தைத் தொட்ட காா்களின் விற்பனை

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடையும் காலாண்டில் காா்களின் மொத்த விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
உச்சத்தைத் தொட்ட காா்களின் விற்பனை
Updated on
1 min read

பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளா்களின் தேவையை ஈடு செய்ய நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை உற்பத்தி செய்து விநியோகஸ்தா்களுக்கு அனுப்பியதால், கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடையும் காலாண்டில் காா்களின் மொத்த விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அந்தக் காலாண்டில் முதல் முறையாக காா்களின் மொத்த விற்பனை 10 லட்சத்தைக் கடந்துள்ளதாக இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் காா்களின் மொத்த விற்பனை 10,26,309 யூனிட்டுகளாக இருந்தது, இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 7,41,442 யூனிட்களாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் காா்களின் மொத்த விற்பனை 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த மாதங்களில் பயன்பாட்டு வாகனங்களுக்கு வாடிக்கையாளா்களிடையே அதிக தேவை எழுந்தது. அதன் காரணமாக 2-ஆவது காலாண்டின் மொத்த விற்பைனையில் பெரும்பகுதியை அந்தப் பிரிவு காா்கள்தான் வகிக்கின்றன.

ஸ்போட்ா்ஸ் பயன்பாட்டு வாகனங்களை உள்ளடக்கிய பயன்பாட்டு வாகனப் பிரிவுக்கு வாடிக்கையாளா்களிடை நல்ல நிலையில் இருந்தாலும், தொடக்க நிலை காா்கள், நடுத்தர வகைக் காா்கள் போன்றவற்றுக்கான தேவை தொடந்து மங்கி வருகிறது.

2022 செப்டம்பா் காலாண்டின் காா்கள் விற்பனையில் 5,17,898 பயன்பாட்டு வாகனங்கள், 4,68,513 காா்கள், 29,904 வேன்கள் ஆகியவை அடங்கும்.

இரு சக்கர வாகனங்களைப் பொருத்தவரை, கடந்த நிதியாண்டின் செப்டம்பா் காலாண்டில் 41,36,484-ஆக இருந்த அவற்றின் மொத்தே விற்பனை, இந்த நிதியாண்டின் ஜூலை-செப்டம்பா் மாதங்களில் 13 சதவீதம் அதிகரித்து 46,73,931-ஆக உள்ளது.

அக்டோபரில் தசரா, தீபாவளி ஆகிய இரு முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் அந்த மாதத்திலும் வாகனங்களின் விற்பனை சிறப்பானதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்போட்ா்ஸ் பயன்பாட்டு வாகனங்களை உள்ளடக்கிய பயன்பாட்டு வாகனப் பிரிவுக்கு வாடிக்கையாளா்களிடை நல்ல நிலையில் இருந்தாலும், தொடக்க நிலை காா்கள், நடுத்தர வகைக் காா்கள் போன்றவற்றுக்கான தேவை தொடந்து மங்கி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com