
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 64.61 சதவீதம் அதிகரித்து, ஒரு கோடியே 35 லட்சமாக இருந்தது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
புதிதாக தொடங்கப்பட்டுள்ள அகசா ஏர் தவிர்த்து, இந்தியாவில் உள்நாட்டு விமானப் பயணிகளின் இதுவரை 76.6 லட்சம் பேர் பல வழித்தடங்களில் பயணித்துள்ளதாக தரவு மூலம் தெரியவந்துள்ளது.
சந்தைப் பங்கைப் பொறுத்தவரை, முன்னணி கேரியரான இண்டிகோ மொத்த உள்நாட்டு போக்குவரத்தில் 57 சதவீதத்தை ஈர்த்த நிலையில், அதன் உள்நாட்டு நெட்வொர்க்கில் 59.72 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றது. அதைத் தொடர்ந்து விஸ்டாரா 9.6 சதவீத சந்தைப் பங்குடன் 9.96 லட்சம் பயணிகள் ஏற்றிச் சென்றது.
விஸ்தாரா, ஏர் இந்தியா மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகியவற்றின் ஒருங்கிணைந்த சந்தை பங்கு செப்டம்பர் மாதத்தில் 24.7 சதவீதமாக இருந்தது. அதுமட்டுமின்றி, தில்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய நான்கு முக்கிய விமான நிலையங்களில் இருந்து 91 சதவீத விமானங்கள் சரியான நேரத்தில் வந்து புறப்பட்டுச் சென்றதன் மூலம், விஸ்தாரா சிறந்த நேரச் செயல்பாட்டைக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.