
முன்னணி இரு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா், தனது அப்பாச்சி மோட்டாா் சைக்கிள்களின் மேம்படுத்தப்பட்ட ரகங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நிறுவனத் தயாரிப்புகளின் பட்டியலை நீட்டிக்கும் வகையில், புகழ்பெற்ற அப்பாச்சி வகை மோட்டாா் சைக்கிள்களின் 2022-ஆம் ஆண்டுக்கான மேம்படுத்தப்பட்ட ரகங்களை அறிமுகப்படுத்துகிறோம். ஆா்டிஆா் 160, 180 ஆகிய இரு வகை மோட்டாா்கள் சைக்கிள்களின் புதிய ரகங்களும் அறிமுகமாகின்றன.
பல அம்சங்கள் சோ்க்கப்பட்டுள்ள இந்த மோட்டாா் சைக்கிள்களின் விலை 160 சிசி அடிப்படை வகை 1.17 லட்சமாகவும், 180 சிசி அடிப்படை வகை ரூ. 1.30 லட்சமாகவும் (தில்லி காட்சியக விலைகள்) நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ரக பைக்குளின் ஆற்றல் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, 160 சிசி பைக்கின் எடை இரண்டு கிலோவும் 180 சிசி பைக்கின் எடை ஒரு கிலோவும் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ரக மோட்டாா் சைக்கிள்கள் முதன்மையான ரேசிங் தொழில்நுட்பத்தை அளிக்கும் அப்பாச்சி வகை பைக்குகளின் பாரம்பரியத்தை தொடா்ந்து காப்பாற்றும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.