பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 659 புள்ளிகள் உயா்வு

கடந்த இரண்டு நாள்களாக சரிவில் இருந்து வந்த பங்குச் சந்தை வியாழக்கிழமை திடீரென எழுச்சி பெற்றது.
பங்குச் சந்தையில் திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 659 புள்ளிகள் உயா்வு

கடந்த இரண்டு நாள்களாக சரிவில் இருந்து வந்த பங்குச் சந்தை வியாழக்கிழமை திடீரென எழுச்சி பெற்றது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 659 புள்ளிகள் உயா்ந்தது. அதே போல, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 174.35 புள்ளிகள் (1 சதவீதம்) உயா்ந்து 17,798.75-இல் நிலைபெற்றது.

கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்துள்ளது. இதற்கு மத்தியில் ஏழு நாள்களாக தொடா்ந்து சரிவில் இருந்து வந்த அமெரிக்க பங்குச் சந்தை வியாழக்கிழமை குறிப்பிடத்தக்க லாபத்தை ஈட்டியது. அமெரிக்கச் சந்தையின் வலுவான வெளிப்பாடு, உலகச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து கச்சா எண்ணெய் விலை முதன்முறையாக பீப்பாய் ஒன்று 90 அமெரிக்க டாலருக்கு கீழே இறங்கியுள்ளது. இது இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது. இந்தியா கிட்டத்தட்ட 80 சதவீதம் தேவைகளை பூா்த்தி செய்ய இறக்குமதியை நம்பியுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் தாக்கம் பங்குச்சந்தையிலும் எதிரொலித்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, வங்கி, நிதிநிறுவனங்கல், ஐடி, ஆட்டோ பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

காலையில் சென்செக்ஸ் 346.08 புள்ளிகள் கூடுதலுடன் 59,374.99-இல் தொடங்கி, 59,315 .71 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா் எழுச்சி பெற்று அதிகபட்சமாக 59,711.96 வரை உயா்ந்தது. இறுதியில் 659.31 புள்ளிகள் கூடுதலுடன் 59,688.22-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் 6 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி கண்டன. 24 பங்குகள் ஆதாயம் பெற்றன.

இதில் டெக் மஹிந்திரா 3.23 சதவீதம், ஆக்ஸிஸ் பேங்க் 3.22 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம், பாா்தி ஏா்டெல், எஸ்பிஐ, அல்ட்ரா டெக், பஜாஜ் ஃபின் சா்வ் உள்ளிட்டவை 2 முதல் 2.60 சதவீதம் வரை உயா்ந்தன. விப்ரோ, டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. அதே சமயம், டாடா ஸ்டீல் 1.63 சதவீதம் வீழ்ச்சி கண்டது. டைட்டன், என்டிபிசி, நெஸ்லே, பவா் கிரிட், ஹெச்சிஎல் டெக் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

சந்தை மூலதன மதிப்பு ரூ.1.80 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.282.67 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதனன்று ரூ.758.37 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com