புதிதாக 100 கிளைகளை தொடங்க ஜோஸ் ஆலுக்காஸ் திட்டம்!

நாடு முழுவதும் ரூ. 5,500 கோடி முதலீட்டில் 100 புதிய கிளைகளை திறக்க ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
புதிதாக 100 கிளைகளை தொடங்க ஜோஸ் ஆலுக்காஸ் திட்டம்!
Published on
Updated on
1 min read

நாடு முழுவதும் ரூ. 5,500 கோடி முதலீட்டில் 100 புதிய கிளைகளை திறக்க ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகர் ஆர்.மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

இந்தியாவில் சில்லறை தங்க நகைகள் விற்பனைத் துறையில் உள்ள ஒரு நிறுவனம் மேற்கொள்ளும் மிகப்பெரிய முதலீடு மற்றும் விரிவாக்கத் திட்டம் இதுவாகும். கேரள மாநிலத்தின் தங்கத் தலைநகரான திருச்சூரில் தொடங்கப்பட்டு, தங்க நகை விற்பனைத் துறையில் முன்னோடி நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ், ஜிசிசி நாடுகளிலும் விற்பனையகங்களை திறந்த முதல் மற்றும் முன்னோடி நிறுவனமாகவும் விளங்குகிறது.

நாட்டிலேயே முதல்முறையாக நகை கடைகளை திறந்து, ஆயிரக்கணக்கான டிசைன்களை விற்பனை செய்த நிறுவனம் ஜோஸ் ஆலுக்காஸ். 916 முத்திரையிட்ட நகைகளை கண்டுபிடித்த முதல் தங்க நகை விற்பனையாளர் என்ற சாதனையுடன், தென்னிந்தியாவில் தங்க நகைகளின் தரத்தை சர்வதேச தரத்துக்கு உயர்த்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது ஜோஸ் ஆலுக்காஸ்.

இந்தியாவில் விற்கப்படும் நகைகளுக்கு பிஐஎஸ் 916 தர முத்திரை கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தபோது, அதற்கான பிரசாரத்தை ஜோஸ் ஆலுக்காஸ் மேற்கொண்டது. தற்போது தங்க நகைகளுக்கான எச்யுஐடி என்ற சான்றிதழையும் ஜோஸ் ஆலுக்காஸ் வழங்கி வருகின்றது.

தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகளை டிஜி கோல்டு என்ற முறையில் ஆன்லைன் மூலமும் வாங்கக்கூடிய வகையில் நகை விற்பனை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது 50 கிளைகள் மூலம் மட்டுமே ரூ. 9,000 கோடி விற்பனை வருவாயை ஜோஸ் ஆலுக்காஸ் ஈட்டி வருகின்றது. மிக அதிகளவிலான கிளைகளை கொண்ட நிறுவனங்கள்கூட நினைத்து பார்க்க முடியாத உயரத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விரிவாக்க திட்டமாக விரைவில் ரூ. 5,500 கோடி முதலீட்டில் 100 கிளைகள் திறக்கப்படும்.

தென்னிந்திய நகரங்கள் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களை தொடர்ந்து, தற்போது ஐரோப்பா, அமெரிக்க நாடுகளிலும் கிளைகளை திறக்கும் முயற்சியில் ஜோஸ் ஆலுக்காஸ் ஈடுபட்டுள்ளது.

உலகளாவிய விரிவாக்கம் என்பது இந்தியர்கள் வசிக்கும் நாடுகளில் மட்டுமின்றி, உலகின் மிக முக்கிய நகரங்களிலும்கூட கிளைகள் திறக்கப்படும்.

இந்தியாவுக்கு வெளியே நகைகளின் டிசைனர் பிராண்டாக இருக்க வேண்டும் என்பதால், சர்வதேச வடிவமைப்புக் கூடம் அமைக்கப்பட்டு, நாட்டின் முன்னணி நகை வடிவமைப்பாளர்களில் ஒருவருடன் இணைந்து புதிய வடிவிலான நகைகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளோம்.

ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் குளோபல் அம்பாசிடராக பிரபல நடிகர் மாதவன் இணைந்து செயல்பட உள்ளார். அவருடன் இணைந்து நடிகை கீர்த்தி சுரேஷும் எதிர்காலங்களில் பிரசாரம் மேற்கொள்வார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com