கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் 677 புள்ளிகள் சரிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் "கரடி' ஆதிக்கம் கொண்டது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 677 புள்ளிகளை இழந்தது. 
கரடி ஆதிக்கம்: சென்செக்ஸ் 677 புள்ளிகள் சரிவு
Updated on
1 min read

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் "கரடி' ஆதிக்கம் கொண்டது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 677 புள்ளிகளை இழந்தது.
 கடந்த இரு தசாப்தங்களாக அதிகரித்து வரும் கடன் மற்றும் ஆட்சித் தரங்களில் நிலையான சரிவு ஆகியவற்றைக் மேற்கொள்காட்டி, அமெரிக்க அரசின் கடன் மதிப்பீட்டை ஃபிட்ச் ரேட்டிங்க்ஸ் ஒரு படி குறைத்துள்ளது. இதன் தாக்கம் உலகளாவிய சந்தைகளில் எதிரொலித்தது. இதைத் தொடர்ந்து, உள்நாட்டுச் சந்தையிலும் ஆரம்பம் முதல் "கரடி' ஆதிக்கம் கொண்டது. அனைத்துத் துறை பங்குகளும் அதிகம் விற்பனைக்கு வந்ததால் பெரிய சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. மேலும், இந்திய சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த 3 தினங்களாக பங்குகளை விற்று வருவதும் முதலீட்டாளர்களின் உணர்வுகளை பாதித்துள்ளது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு கடும் வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.3.47 லட்சம் கோடி குறைந்து வர்த்தக முடிவில் ரூ.303.33 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.92.85 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
 சென்செக்ஸ் கடும் சரிவு: காலையில் 394.59 புள்ளிகள் குறைந்து 66,064.41-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 66,261.97 வரை மேலே சென்றது. பின்னர், 65,431.68 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 676.53 புள்ளிகள் (1.02 சதவீதம்) குறைந்து 65,782.78-இல் முடிவடைந்தது.
 15 பங்குகள் விலை உயர்வு: சென்செக்ஸ் பட்டியலில் 5 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 25 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் 518 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் வந்தன. 1,546 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 5 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 45 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
 நிஃப்டி 207 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 78.15 புள்ளிகள் குறைந்து 19,655.40-இல் தொடங்கி அதிகபட்சமாக 19,678.25 வரை மேலே சென்றது. பின்னர், 19,423.55 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 207 புள்ளிகளை (1.05சதவீதம்) இழந்து 19,526.55-இல் நிறைவடைந்துள்ளது.
 ஏற்றம் பெற்ற பங்குகள்
 நெஸ்லே 1.15%
 ஹிந்துஸ்தான் யுனிலீவர் 0.75%
 ஏசியன் பெயின்ட் 0.64%
 டெக் மஹிந்திரா 0.24%
 அல்ட்ராடெக் சிமென்ட் 0.05%
 சரிவைக் கண்ட பங்குகள்
 டாடா ஸ்டீல் 3.45%
 டாடா மோட்டார்ஸ் 3.19%
 பஜாஜ் ஃபின்சர்வ் 2.89%
 என்டிபிசி 2.69%
 எஸ்பிஐ 2.16%
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com