
புதுதில்லி: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் ஏப்ரல்-ஜூன் காலாண்டு நிகர லாபம் பல மடங்கு அதிகரித்து ரூ.9,544 கோடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து அதன் பங்குகள் இன்று கிட்டத்தட்ட 3 சதவீத லாபத்துடன் முடிவடைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் ஒரு பங்கின் விலை 2.78 சதவிகிதம் உயர்ந்து 659.95 ரூபாயாக முடிவடைந்தது. இது ஒரே நாளில் 5.42 சதவிகிதம் உயர்ந்து ரூ.676.95 ஆக உள்ளது. அதே போல் தேசிய பங்குச் சந்தையில் 2.85 சதவிகிதம் உயர்ந்து ரூ.660 நிலைபெற்றது.
மும்பை பங்குச் சந்தையில் 4.71 லட்சம் பங்குகளும், தேசிய பங்குச் சந்தையில் 52.54 லட்சம் பங்குகளும் வர்த்தகமாயின.
பொதுத் துறையைச் சோ்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனம் கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.683 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. ஜூன் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.1,68,881 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1,88,749 கோடியானது என்று எல்.ஐ.சி தெரிவித்துள்ளது.
2022-23ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் முதலீடுகள் மூலம் ஈட்டிய நிகர வருவாய் ரூ.69,571 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.90,309 கோடியானது.
சொத்துக்களைப் பொறுத்தவரை, மொத்த வாராக் கடன் விகிதம், 5.84 சதவீதத்திலிருந்து 2.48 சதவீதமாக குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.