இந்தியாவில் 5ஜி சாதனத்தை அறிமுகப்படுத்திய சீமென்ஸ் நிறுவனம்!

தொழில்துறை உற்பத்தி நிறுவனமான சீமென்ஸ், உற்பத்தித் துறையில் முக்கிய அங்கமான 5ஜி ரவுட்டரை  அறிமுகப்படுத்தியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தொழில்துறை உற்பத்தி நிறுவனமான சீமென்ஸ், உற்பத்தித் துறையில் முக்கிய அங்கமான 5ஜி ரவுட்டரை  அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, தனியார் தொழில்துறையில் 5ஜி பயன்பாடுகள் தன்னாட்சி இயந்திரங்கள், உள்-தளவாடங்கள், தொழில்துறை விளிம்பு, தொலைநிலை கண்டறிதல், உதவி வேலை, ஆக்மென்டட் ரியாலிட்டி, வயர்லெஸ் பேக்ஹால், எட்ஜ் கம்ப்யூட்டிங் மற்றும் மொபைல் உபகரணங்கள் ஆகிய வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகளை வழங்குகிறது.

 உற்பத்தித் துறையின் தேவைகளுக்கு ஏற்றவாறு கட்டமைக்கப்படக்கூடிய இடமாக 5ஜி நெட்வொர்க்குகள் உள்ளது. தனியார் 5ஜி நெட்வொர்க்குகள் தரவுப் பாதுகாப்பையும் வழங்குகின்றன என்று சீமென்ஸ் லிமிடெட், டிஜிட்டல் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் சுப்ரகாஷ் செளத்ரி தெரிவித்துள்ளார்.

இதன் தொழில்துறை 5ஜி ரவுட்டர்கள் ஸ்கேலான்ஸ் MUM856-1 மற்றும் MUM853-1 ஆகியவை மொபைல் பிராட்பேண்ட் பரிமாற்றம் மற்றும் நம்பகமான மற்றும் இயந்திர வகை தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.

இந்த ரவுட்டர்கள் தொழில்துறை பயன்பாடுகளை 5ஜி, 4ஜி (LTE) மற்றும் 3ஜி (UMTS) மொபைல் வயர்லெஸ் நெட்வொர்க்குகளுடன் இணைக்கும் என்று கூறப்படுகிறது. 

ஸ்கேலான்ஸ் MUM856-1 ஆனது தரவிறக்கம் செய்ய 1000Mbps வரையிலான அலைவரிசை வேகத்தையும் தரவுகளை பதிவேற்ற 500  Mbps வரையிலான அலைவரிசை வேகத்தை வழங்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com