
அதிக எதிர்பார்ப்புக்குப் பிறகு, ஹூண்டாய் இந்தியா இறுதியாக இன்று (ஜனவரி 11) நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் ஐயோனிக் 5 எலக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது.
இந்த மின்சார வாகனமானது முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.44.95 லட்சம் என்ற அறிமுக விலையில் வழங்கப்படும் என ஹூண்டாய் தெரிவித்துள்ளது. அதே வேளையில் சர்வதேச சந்தைகளில் பல வேரியண்ட் போலல்லாமல், இந்தியாவில் ஐயோனிக் 5 தனது பயணத்தை துவங்கியுள்ளது. இதன் விலை இந்தியாவில் ரூ.44.95 லட்சத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிற்கான ஐயோனிக் 5 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது டூ-வீல் டிரைவ் உடன் 214 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 100 கிமீ வேகத்தை 7.4 வினாடிகளில் கடக்கிறது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 631 கிமீ வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இது ஹூண்டாய் இ-ஜிஎம்பி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடதக்கது.
இதில் இ-ஜிஎம்பி கட்டமைப்பு வசதிகள் வழங்கி உள்ளதால் டிரைவிங் டைனமிக்ஸ், மேம்படுத்தப்பட்ட கார்னரிங் செயல்திறன் மற்றும் அதிவேக நிலைத்தன்மை வெகுவாக கையாள்கிறது. இதன் உள்புறம் அதிக சவுகரியத்தை வழங்கும் வகையில் அதிக இடவசதி கொண்டுள்ளது. காரின் இருக்கைகளை பயனர் வசதிக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
காரின் வடிவமைப்பை பொருத்தவரை புதிய பிக்சல் ரக ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடதக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.