
கடந்த டிசம்பருடன் நிறைவடைந்த காலாண்டில் பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியாவின் (பிஓஐ) நிகர லாபம் 12 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில், வங்கியின் நிகர லாபம் ரூ.1,151 கோடியாக உள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.1,027 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021-22-ஆம் நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் ரூ.11,211.14 கோடியாக இருந்த வங்கியின் மொத்த வருவாய், நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.14,159.60 கோடியாக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.3,408 கோடியிலிருந்து 64 சதவீதம் அதிகரித்து ரூ.5,596 கோடியாக உள்ளது. செயல்பாட்டு லாபம் ரூ.2,096 கோடியிலிருந்து 74 சதவீதம் அதிகரித்து ரூ.3,652 கோடியாக உயா்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.