

அரசுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் அண்டு சிந்து வங்கியின் நிகர லாபம் கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 24 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2022 அக்டோபா்-டிசம்பா்) வங்கியின் நிகர லாபம் ரூ.373 கோடியாக உள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் ஏறத்தான 24 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.301 கோடியாக இருந்தது.
கடந்த நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் வங்கியின் மொத்த வருவாய் ரூ.2,107.44 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.1,871.18 கோடியாக இருந்தது.
கடந்த டிசம்பா் மாத இறுதியில் வங்கியின் வட்டி லாப விகிதம் 3.12 சதவீதமாக இருந்தது.
வங்கியின் மொத்த வாராக் கடன் கடந்த 2021 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 14.44 சதவீதமாக இருந்து. அது 2022-ஆம் ஆண்டின் அதே மாதங்களில் 8.36 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.