
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் 2023 ஜூன் மாத விற்பனை புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
மும்பையை தளமாகக் கொண்ட இந்திய பயன்பாட்டு வாகன உற்பத்தியாளர் கடந்த மாதம் 32,585 எஸ்யூவிக்களை விற்பனை செய்து 22.4 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அதன் விற்பனை 26,620-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 2023-ல் 32,585 எஸ்யூவிக்களை விற்பனை செய்து 22.4 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்தது. ஆனால் மாத அடிப்படையில் அதன் விற்பனை சற்று குறைந்துள்ளது. 2022 ஜூனில் 26,620 யூனிட்டுகளும், இந்த ஆண்டு மே மாதத்தில் 32,883 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன. அதே வேளையில் ஜூன் மாதத்தில் 2,505 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் வணிக மற்றும் பயணிகள் வாகனங்களும் அடங்கும் என்று மஹிந்திரா தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.