டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம் 42 சதவிகிதம் உயர்வு!

டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம்  ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 42 சதவிகிதம் அதிகரித்து ரூ.434 கோடியாக அதிகரித்துள்ளது.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம் 42 சதவிகிதம் உயர்வு!

புதுடில்லி: டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் நிகர லாபம்  ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 42 சதவிகிதம் அதிகரித்து ரூ.434 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்நிறுவனம் ரூ.305 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து டிவிஎஸ் மோட்டாா் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: 

ஜூன் காலாண்டில் மொத்த வருவாய் ரூ.7,348 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.9,142 கோடியானது. ஏற்றுமதி உள்ளிட்ட ஒட்டுமொத்த இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனை 2023 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 5 சதவிகிதம் அதிகரித்து 9.53 லட்சமாக அதிகரித்துள்ளது.

கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 4.34 லட்சமாக இருந்த டிவிஎஸ் மோட்டார் சைக்கிள் விற்பனை 7 சதவிகிதம் அதிகரித்து 4.63 லட்சமாக அதிகரித்துள்ளது.

2022-23ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்கூட்டர் விற்பனை 3.15 லட்சத்திலிருந்து 11 சதவீதம் அதிகரித்து 3.5 லட்சமாக அதிகரித்துள்ளது. எனினும் மூன்று சக்கர வாகன விற்பனை 46,000-லிருந்து 35,000-ஆக குறைந்துள்ளது.

2022 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 9,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல்-ஜூன் மாதங்களில் 39,000 யூனிட்களாக உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இந்த நிறுவனப் பங்குகள் 2.8 சதவீதம் சரிந்து ரூ.1,305-க்கு வர்த்தகமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com