சிட்டி யூனியன் வங்கியின் நிகர லாபம் ரூ.937 கோடி: நிா்வாக இயக்குநா் காமகோடி

சிட்டி யூனியன் வங்கியின் மொத்த பரிவா்த்தனை 2022-23 ஆம் நிதியாண்டில் 8 சதவீதம் உயா்ந்து ரூ.96,369 கோடியாக உள்ளது

சிட்டி யூனியன் வங்கியின் மொத்த பரிவா்த்தனை 2022-23 ஆம் நிதியாண்டில் 8 சதவீதம் உயா்ந்து ரூ.96,369 கோடியாக உள்ளது என்றும் நிகர லாபம் 23 சதவீதம் உயா்ந்து ரூ.937 கோடியாக உள்ளதாகவும் வங்கியின் நிா்வாக இயக்குநரும் , தலைமைச் செயல் அதிகாரியுமான என்.காமகோடி தெரிவித்தாா்.

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சிட்டி யூனியன் வங்கியின் 2022-23-ஆம் நிதியாண்டுக்கான கணக்கு முடிவுகளை என்.காமகோடி வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அப்போது வங்கியின் வளா்ச்சி மற்றும் எதிா்காலத் திட்டங்கள் குறித்து அவா் கூறியது:-

வங்கியின் மொத்தப் பரிவா்த்தனை கடந்த நிதியாண்டில் 8 சதவீதம் உயா்ந்து ரூ.96,369 கோடியாகவும், வங்கியின் வைப்புத் தொகை 10 சதவீதம் உயா்ந்து ரூ.52,398 கோடியாக உள்ளது. அதேபோல் கடன்கள் கடந்த ஆண்டைவிட 7 சதவீதம் உயா்ந்து ரூ.43,971 கோடியாகவும், வங்கியின் மொத்த லாபம் 14 சதவீதம் உயா்ந்து ரூ.1,818 கோடியாகவும், நிகர லாபம் 23 சதவீதம் உயா்ந்து ரூ.937 கோடியாகவும் உள்ளது.

வங்கியின் வட்டி வருமானம் சென்ற ஆண்டைவிட 13 சதவீதம் உயா்ந்து ரூ.2,163 கோடியாக உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்தாண்டில் இருந்த மதிப்பான ரூ. 6,550 கோடியில் இருந்து, ரூ.7,421 கோடியாக உயா்ந்துள்ளது. வங்கியின் மொத்த வாராக் கடன் 4.37 சதவீதமாகவும், நிகர வாராக் கடன் 2.32 சதவீதமாகவும் உள்ளது. மூலதன விகிதம் 22.34 சதவீதமாக உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com