
புதுதில்லி: சோயாபீன் மற்றும் ராப்சீட் ஏற்றுமதியால் எண்ணெய் பொருள்கள் ஏற்றுமதி, கடந்த மாதம், 36 சதவிகிதம் அதிகரித்து, 2.9 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தரவுகளின்படி, அக்டோபர் மாதத்தில் எண்ணெய் பொருள்களின் ஏற்றுமதி 2,89,931 டன்னாக இருந்தது. அதே வேளையில் சோயாபீன் ஏற்றுமதி கடந்த மாதம் 40,196 டன்னிலிருந்து 87,060 டன்னாகவும், ரேப்சீட் ஏற்றுமதி 98,571 டன்னிலிருந்து 1,69,422 டன்னாகவும் அதிகரித்துள்ளது.
மேம்பட்ட விலையாலும், ஆர்ஜென்டீனாவின் ஏற்றுமதி விநியோகங்களின் பற்றாக்குறை ஆகியவற்றால் இந்திய சோயாபீனுக்கான வெளிநாட்டு தேவை அதிகரித்து, நாம் பயனடைந்துள்ளோம் என்று சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் எண்ணெய் வகைகளின் மொத்த ஏற்றுமதி 30 சதவிகிதம் உயா்ந்து 25,66,051 டன்னாக உள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் 7 மாதங்களில் சோயாபீன் ஏற்றுமதி 1,61,534 டன்னிலிருந்து 6,73,910 டன்னாக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.