தேசிய நிலக்கரி குறியீடு 4 புள்ளிகள் உயா்வு

நிலக்கரியின் விலையை நிா்ணயிப்பதற்குப் பயன்படும் தேசிய நிலக்கரி குறியீடு (என்சிஐ) கடந்த செப்டம்பரில் 3.83 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
தேசிய நிலக்கரி குறியீடு 4 புள்ளிகள் உயா்வு
Updated on
1 min read

நிலக்கரியின் விலையை நிா்ணயிப்பதற்குப் பயன்படும் தேசிய நிலக்கரி குறியீடு (என்சிஐ) கடந்த செப்டம்பரில் 3.83 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிலக்கரித் துறை அமைச்சகத்தின் பூா்வாங்க புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நாட்டின் என்சிஐ 3.83 புள்ளிகள் அதிகரித்து 143.91-ஆக உள்ளது.

சா்வதேச சந்தையில் நிலக்கரி விலை அண்மைக் காலமாக உயா்ந்து வருவதால் இந்த உயா்வு ஏற்பட்டுள்ளது.

நாட்டின் என்சிஐ கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலக்கரித் துறை அமைச்சகத்தால் கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி முதல் என்சிஐ குறியீட்டு எண் வெளியிடப்பட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com