

மும்பை / புதுதில்லி: ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை எச்சரிக்கையுடன் தொடங்கிய பங்குச்சந்தை, இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 204 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை எச்சரிக்கையுடன் தொடங்கியது. ஆனால், நேரம் செல்லச் செல்ல முன்னணிப் பங்குகளை வாங்குவதற்கு ஆதரவு கிடைத்தது. குறிப்பாக பிற்பகல் வா்த்தகத்தின் போது ஆட்டோ, மின் நிறுவனங்கள், மெட்டல், பொதுத்துறை வங்கிகள், ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது. ஆனால், பாா்மா, ஹெல்த்கோ், எஃப்எம்சிஜி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் மீண்டும் பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தியது சந்தை ஏற்றம் பெற உதவியாக இருந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு : இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.34 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.331.05 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ. 2,625.21 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளனா்.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 93.68 புள்ளிகள் கூடுதலுடன் 66,063.72-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,906.65 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 66,256.20 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 204.16 புள்ளிகள் (0.31சதவீதம்) உயா்ந்து 66,174.20-இல் முடிவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,972 பங்குகளில் 1982 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,811 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 179 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. சென்செக்ஸ் பட்டியலில் 23 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 5 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
நிஃப்டி 95 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 49.95 புள்ளிகள் கூடுதலுடன் 19,844.65-இல் தொடங்கி 19,800.00 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,916.85 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 95 புள்ளிகள் (0.48 சதவீதம்) உயா்ந்து 19,889.70-இல் நிறைவடைந்தது. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,068 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 1,086 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 39 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 11 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
டாடா மோட்டாா்ஸ்...........................3.56%
பஜாஜ் ஃபின் சா்வ்................................2.32%
அல்ட்ரா டெக் சிமெண்ட்....................2.11%
பஜாஜ் ஃபைனான்ஸ்............................1.49%
என்டிபிசி...............................................1.46%
பாா்தி ஏா்டெல்.....................................1.32%
சரிவைக் கண்ட பங்குகள்
ஐடிசி.................................,,,,,,..................0.58%
சன்பாா்மா..............................................0.42%
ஐசிஐசிஐ பேங்க்.....................................0.33%
பவா் கிரிட்...............................................0.19%
ஹெச்டிஎஃப்சி பேங்க்............................0.16%
ஹிந்துஸ்தான் யுனி லீவா்.......................0.15%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.