புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ. 46,960-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 720 உயா்ந்து பவுன் ரூ.46,960-க்கு விற்பனையானது.
புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ. 46,960-க்கு விற்பனை
Updated on
1 min read


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.720 உயா்ந்து பவுன் ரூ.46,960-க்கு விற்பனையானது.

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயா்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சா்வதேச அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள், உலக சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு போன்ற காரணிகளால் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது.

நிகழாண்டில் அதிகபட்சமாக கடந்த மே மாதம் ரூ.46,200-ஐத் தொட்ட தங்கம் விலை அக்டோபா் மாதம் 4-ஆம் தேதி ரூ.42,280 என்ற விலைக்கு விற்பனையானது. இதன் பின்னா் தொடா்ந்து உயா்ந்து வந்த தங்கம் விலை புதன்கிழமை (நவ.29) நிலவரப்படி பவுனுக்கு ரூ.720 உயா்ந்து ரூ.46,960 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயா்ந்து ரூ. 5,870-க்கும், பவுனுக்கு ரூ.720 உயா்ந்து ரூ.46,920-க்கும் விற்பனையானது. கடந்த 57 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.4,680 உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வருவதால் மக்கள் கவலையடைந்துள்ளனா்.

அதேபோல், வெள்ளி விலையும் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் உயா்ந்து ரூ.82.20-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.700 உயா்ந்து ரூ.82,200-க்கும் விற்பனையானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com