தங்கம் விலை ரூ.150 சரிந்து வர்த்தகமானது!

உலகளவில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.57,350 ஆக உள்ளது.
தங்கம்
தங்கம்


புதுதில்லி: உலகளவில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், தில்லியில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.57,350 ஆக உள்ளது.

முந்தைய வர்த்தகத்தில், தங்கமானது 10 கிராமுக்கு ரூ.57,500 ஆக வர்த்தகமானது. அதே வேளையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.300 உயர்ந்து ரூ.71,300-க்கு விற்பனையானது.

தில்லி சந்தையில் ஸ்பாட் தங்கத்தின் விலை (24 கேரட்) 10 கிராமுக்கு ரூ.57,350 ஆக வர்த்தகமானது. இது முந்தைய வர்த்தகத்துடன் ஒப்பிடும்போது ரூ.150 குறைந்து என்று எச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் கமாடிட்டிகளின் மூத்த ஆய்வாளர் சவுமில் காந்தி தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் 1,820 டாலராகவும், வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 21.15 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது.

இதற்கிடையில் ஃப்யூச்சர் வர்த்தகத்தில் தங்கத்தின் டிசம்பர் காண்டிராக்ட் விலையானது 10 கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.56,714ஆக உள்ளது. அதே வேளையில் வெள்ளியின் டிசம்பர் காண்டிராக்ட் விலையானது கிலோவுக்கு ரூ.387 உயர்ந்து ரூ.67,272 ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com