3வது நாளாக சரிவில் முடிந்த வணிகம்! 18 நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி!

வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 16) இந்திய பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது.
3வது நாளாக சரிவில் முடிந்த வணிகம்! 18 நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சி!


வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 16) இந்திய பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிவடைந்தது. இதன்மூலம் கடந்த 3 வணிக நாள்களாக பங்குச்சந்தை சரிவுடன் முடிவது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.81 புள்ளிகள் சரிந்து 66,166.93 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. இது 0.17 சதவிகிதம் சரிவாகும். 

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 19.30 புள்ளிகள் சரிந்து 19,731.75 புள்ளிகளாக வணிகம் நிறைவடைந்தது. இது 0.098 சதவிகிதம் சரிவாகும். 

பங்குச்சந்தை குறியீட்டிலுள்ள 30 நிறுவனங்களில் 18 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன. அதிகபட்சமாக டிசிஎஸ் 1.29 சதவிகிதம் சரிந்தது. அதற்கு அடுத்தபடியாக இந்தஸ்ந்த், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com