மஹிந்திரா வாகனத்தின் விற்பனை 19 சதவிகிதம் அதிகரிப்பு!

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 19 சதவிகிதம் அதிகரித்து 70,350-ஆக உள்ளது.
மஹிந்திரா வாகனத்தின் விற்பனை 19 சதவிகிதம் அதிகரிப்பு!
Published on
Updated on
1 min read

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 19 சதவிகிதம் அதிகரித்து 70,350-ஆக உள்ளது.

மும்பையை தளமாகக் கொண்ட ஆட்டோமொபைல் நிறுவனத்தின் பயணிகளின் வாகன விற்பனை உள்நாட்டு சந்தையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 29,852 யூனிட்டுகளிலிருந்து 25 சதவிகிதம் அதிகரித்து 37,270 ஆக உள்ளது.

26 சதவிகித வளர்ச்சியுடன் ஒரு மாதத்தில் 37,270 என்ற எங்களின் அதிகபட்ச எஸ்யூவி-யை விற்பனையை நாங்கள் உள்நாட்டில் எட்டியுள்ளோம்.

எங்கள் முக்கிய எஸ்யூவி பிராண்டுகளுக்கான தேவை தொடர்ந்து வலுவாக இருந்தாலும், செமிகண்டக்டர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாகங்கள் கிடைப்பதை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைவர் வீஜே நக்ரா.

ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 17 சதவிகிதம் சரிந்து 2,423-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com