கனமழை: சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!புதுக்கோட்டை, ஈரோட்டில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் திடீர் இடமாற்றம்!ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!6.3 பில்லியல் டாலர்கள் கிரிப்டோகரன்சிகளை திருடிய வடகொரியா ஹேக்கர்கள்!சென்னை உள்பட 4,000 கி.மீ. தொலைவு புல்லட் ரயில் சேவைக்கு பிரதமர் ஒப்புதல்!கடற்கரைகளுக்குச் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்: தமிழக அரசு எச்சரிக்கை!சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்!இரண்டாம் நிலை காவலர் பணிக்கு 3,597 தற்காலிகத் தேர்வு

ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிவு!

கடந்த இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 29 காசுகள் மதிப்பு குறைந்துள்ளது.

Updated On :

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதன்கிழமை இன்று (செப். 6) 10 காசுகள் குறைந்து 83.14-ஆக நிறைவடைந்தது. உள்நாட்டு பங்கு வணிகத்தில் ஏற்பட்ட பலவீனம் காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. 

Story image

இந்திய ரூபாய் மதிப்பில், கடந்த இரு வாரங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுவாகும். கடந்த இரு வாரங்களில் மட்டும் மொத்தம் 29 காசுகள் மதிப்பு குறைந்துள்ளது.

அமெரிக்க டாலர் மதிப்பு கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு  104.90 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றுடன் ஒப்பிடும்போது 0.067 சதவிகிதம் உயர்வாகும்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணியில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு 83.02-ஆகத் தொடங்கியது. எனினும் வணிக நேர முடிவில் 10 காசுகள் குறைந்து 83.14-ஆக நிறைவடைந்தது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இந்திய ரூபாய் மதிப்பு 33 காசுகள் குறைந்து 83.04-ஆக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.