ஆப்பிள் ஐஃபோன் 15 பிளஸ் சீரிஸின் தொடக்க விலை ரூ.89,900-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தள்ளுபடியில் ரூ. 46,000-க்கு கிடைக்கிறது.
இந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் 15 மாடல் செப். 12 ஆம் தேதி சந்தையில் அறிமுகமானது.
இதில் நவீன டிஸ்பிளே, 48 மெகா பிக்சல் கேமரா, மறுசுழற்சி செய்யக்கூடிய நவீன பேட்டரிகள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. கிராபிக்ஸ், மொபைல் கேமிங் ஆகிய வசதியுடன் டைப்-சி சார்ஜிங் போர்ட்டர் உள்ளது.
இந்தியாவில் விலை
ஐஃபோன் 15 (128 ஜிபி): ரூ 79,900
ஐஃபோன் 15 (256 ஜிபி): ரூ 89,900
ஐஃபோன் 15 (512 ஜிபி): ரூ 1,09,900
ஐஃபோன் 15 பிளஸ் (128 ஜிபி): ரூ 89,900
ஐஃபோன் 15 பிளஸ் (256 ஜிபி): ரூ 99,900
ஐஃபோன் 15 பிளஸ் (512 ஜிபி): ரூ 1,19,900
ஐஃபோன் 15 ப்ரோ(128 ஜிபி): ரூ. 1,34,900
ஐஃபோன் 15 ப்ரோ (256 ஜிபி): ரூ.1,44,900
ஐஃபோன் 15 ப்ரோ (512 ஜிபி): ரூ. 1,64,900
ஐஃபோன் 15 ப்ரோ (1 டிபி): ரூ. 1,84,900
ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் (256 ஜிபி): ரூ 1,59,900
ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் (512 ஜிபி): ரூ 1,79,900
ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் (1 டிபி): ரூ. 1,99,900
இந்த சீரிஸ் போன்கள் ஆப்பிள் ஷோரூம்களிலும், ஆன்லைனிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஐஃபோன் பயன்பாட்டாளர்கள் 15 பிளஸ் சீரிஸ் போன்களை விற்பனை விலையிலிருந்து சுமார் ரூ. 40,000 குறைவாக பெறும் வகையில் ஆஃபர் வெளியாகியுள்ளன.
ஆஃபர்கள் என்னென்ன?
ஐஃபோன்கள் வாங்குவதற்கு ஹெச்டிஎப்சி கார்டுகளை பயன்படுத்தினால் ஐஃபோன் 15 மாடல்களுக்கு ரூ. 5,000 வரை தள்ளுபடி வழங்கப்படும். இதுவே பழைய ஐஃபோனை கொடுத்துவிட்டு புதிய மாடலை வாங்கினால் ரூ. 6,000 தள்ளுபடி கிடைக்கும்.
உதாரணமாக, ஐஃபோன் 13 மாடலை பரிமாற்றம் செய்து ஐஃபோன் 15 பிளஸ் வாங்கினால், ரூ. 37,500 தள்ளுபடி செய்யப்படும். மேலும், ஹெச்டிஎப்சி கார்டுகளை பணம் செலுத்த பயன்படுத்தினால் ரூ. 6,000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
மொத்தம் ரூ.43,500 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.46,400-க்கு ஐஃபோன் 15 பிளஸ் கிடைக்கும்.
எனினும், ஹெச்டிஎப்சி கார்டு ஆஃபரை தவிர, ஐஃபோன் பரிமாற்ற ஆஃபர்கள் தற்போதைக்கு நேரடி விற்பனையகத்தில் மட்டுமே கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.