தங்கம் பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 45,200-க்கு விற்பனை ஆனது.
மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!
மீண்டும் 42 ஆயிரத்தைத் தொட்ட தங்கம் விலை!
Updated on
1 min read

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 560 குறைந்து ரூ. 45,200-க்கு விற்பனை ஆனது.

சா்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிா்ணயிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் குறைந்துவந்த தங்கத்தின் விலை சில நாள்களாக மெல்ல அதிகரித்தது. சென்னையில் மாா்ச் இறுதியில் தங்கம் விலை அதிகரிக்க தொடங்கி, ரூ.44,720-க்கு விற்பனை ஆனது. தொடா்ந்து தங்கத்தின் விலை ஏப்ரல் மாதத்தில் இருந்தே ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

இரு முறை புதிய உச்சம் பெற்ற தங்கம்...: வரலாறு காணாத வகையில் தங்கம் விலை ஒரே மாதத்தில் இரு முறை புதிய உச்சத்தைத் தொட்டது. அதன்படி, ஏப்.5-ஆம் தேதி பவுனுக்கு ரூ.45,520, வெள்ளிக்கிழமை (ஏப்.14) ரூ. 45,760-க்கு விற்கப்பட்டது.

ஒரே நாளில் ரூ.560 குறைவு: இந்த நிலையில், சனிக்கிழமை சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.5,650-க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 குறைந்து ரூ.81.50-க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனை செய்யபட்டன.

வெள்ளிக்கிழமை விலை நிலவரம்

1 கிராம் தங்கம்................................ ரூ.5,720.

1 பவுன் தங்கம்............................... ரூ.45,760.

1 கிராம் வெள்ளி............................. ரூ83.00.

1 கிலோ வெள்ளி.............................ரூ.83,000.

சனிக்கிழமை விலை

1 கிராம் தங்கம்................................ ரூ.5,650.

1 பவுன் தங்கம்............................... ரூ.45,200.

1 கிராம் வெள்ளி............................. ரூ81.50.

1 கிலோ வெள்ளி.............................ரூ.81,500.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com