

புதுதில்லி: ஐ.டி. நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், ஒருங்கிணைந்த நிகர லாபம், 10.85 சதவீதம் அதிகரித்து ரூ.3,983 கோடி அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,599 கோடியாக இருந்தது.
இருப்பினும், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் லாபம் காலாண்டு அடிப்படையில் ரூ.4,096 கோடியிலிருந்து 3 சதவீதம் குறைந்துள்ளது.
மார்ச் 2022 காலாண்டில் ரூ.22,597 கோடியாக இருந்த நிறுவனத்தின் வருவாய் இந்த காலாண்டில் சுமார் 18 சதவீதம் அதிகரித்து ரூ.26,606 கோடியாக உள்ளது.
இருப்பினும், மூன்றாவது காலாண்டில் அதன் வருவாய் ரூ.26,700 லிருந்து சற்று குறைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.