
மைக்ரோ சாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் / ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்
ஆப்பிள் நிறுவனம் கடனில் மூழ்கி திவாலாகும் நிலையில் இருந்தபோது மைக்ரோசாஃப் நிறுவனம் செய்த முதலீடு ஆப்பிள் நிறுவனத்தைக் காப்பாற்றியுள்ளது.
1997ஆம் ஆண்டு இதே நாளில் (ஆக. 7) மைக்ரோசாஃப் நிறுவனம் சுமார் 150 மில்லியன் டாலரை ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம் வங்கிக்கடனில் மூழ்காமல் ஆப்பிள் நிறுவனம் தப்பித்தது.
சக போட்டியாளரான ஸ்டீவ் ஜாப்ஸ்ஸின் ஆப்பிள் நிறுவனத்தில் முதலீடு செய்து உதவியதன் மூலம் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் இன்றளவும் பாராட்டப்பட்டு வருகிறார். இந்த முதலீட்டின் மூலம் தொழிலில் புதிய வாய்ப்புகளும் உருவானதாக கடந்த 2007ஆம் ஆண்டு ஆங்கில ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
பில் கேட்ஸின் இந்த செயலுக்கு நன்றி தெரிவித்த ஸ்டீவ் ஜாப்ஸ், நன்றி பில், உலகின் மிகச்சிறந்த இடம் என்று அவரின் இதயத்தைக் குறிப்பிடும்படி தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமல்லாமல், தனது ஆப்ரேட்டிங் சிஸ்டம் காப்பியடிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மீது ஆப்பிள் தொடுத்திருந்த வழக்கையும் திரும்பப் பெறுவதாக ஆப்பிள் அறிவித்தது.
இதன்மூலம், ஆப்பிள் - மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடையே புதிய தொழில்முறை வாய்ப்புகளும் ஏற்பட்டன.
20 years ago this week, Steve Jobs was on the cover of @TIME, thanking @BillGates for "saving Apple." pic.twitter.com/AhUnLnOZ8t
— Codecademy (@Codecademy) August 24, 2017
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...