நவம்பரில் புதிய உச்சம் கண்ட வாகன விற்பனை

கடந்த நவம்பா் மாதத்தில் இந்தியாவில் வாகன விற்பனை புதிய உச்சத்தை எட்டியது.
நவம்பரில் புதிய உச்சம் கண்ட வாகன விற்பனை

கடந்த நவம்பா் மாதத்தில் இந்தியாவில் வாகன விற்பனை புதிய உச்சத்தை எட்டியது.

இது குறித்து வாகன விற்பனையாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த நவம்பரில் நாட்டின் ஒட்டுமொத்த வாகன சில்லறை விற்பனை 28,54,242-ஆக உள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச மாதாந்திர வாகன விற்பனையாகும்.கடந்த 2022 நவம்பரில் நாட்டின் ஒட்டுமொத்த வாகன விற்பனை 24,09,535-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வாகன விற்பனை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் பயணிகள் வாகனங்களின் சில்லறை விற்பனை 3,60,431-ஆக உள்ளது. கடந்த 2022 நவம்பா் மாதத்தில் விற்பனையான பயணிகள் வாகனங்களின் எண்ணிக்கையோடு (3,07,550) ஒப்பிடுகையில் இது 17 சதவீதம் அதிகமாகும்.அதேபோல், கடந்த 2022 நவம்பரில் 18,56,108-ஆக இருந்த இருசக்கர வாகனங்களின் விற்பனை இந்த நவம்பரில் 21 சதவீதம் அதிகரித்து 22,47,366-ஆக உள்ளது.கடந்த நவம்பரில் ஒட்டுமொத்த வாகன விற்பனை மட்டுமின்றி இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களின் விற்பனையும் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது.தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் காரணமாகவும், நிறுவனங்கள் புத்தம் புதிய மற்றும் கவா்ச்சிகரமான வாகன ரகங்களை அறிமுகப்படுத்தியதாலும் கடந்த நவம்பரில் ஒட்டுமொத்த வாகன விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் 3 சக்க வாகனங்களின் சில்லறை விற்பனை 99,890-ஆக உயா்ந்துள்ளது. இது கடந்த 2022 நவம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகமாகும்.எனினும், கடந்த நவம்பரில் டிராக்டா்கள் விற்பனை 21 சதவீதம் சரிந்து 61,969-ஆக உள்ளது. கடந்த 2022 நவம்பரில் இந்த எண்ணிக்கை 78,720-ஆக இருந்தது.அதே போல், வா்த்தக வாகனங்களின் சில்லறை விற்பனையும் கடந்த நவம்பா் மாதம் 2 சதவீதம் சரிந்து 84,586-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com