ஹூண்டாயின் 2வது மின்னணு கார் அறிமுகம்! 631 கி.மீ. மைலேஜ்

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் 16வது ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஹுண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது மின்னணு காரான அயோனிக் அறிமுகம் செய்யப்பட்டது. 
அயோனிக் 5 மின்னணு கார்
அயோனிக் 5 மின்னணு கார்


உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் 16வது ஆட்டோமொபைல் கண்காட்சியில் ஹுண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது மின்னணு காரான அயோனிக் அறிமுகம் செய்யப்பட்டது. 

இதற்கு முன்பு கோனா என்ற மின்னணு காரை இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. 

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் 16வது ஆட்டோமொபைல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த புதிய ரக கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அந்தவகையில் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், அயோனிக் 5 இவி என்ற மின்னணு கார் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது மின்னணு கார் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

72.6 kWh திறன் கொண்ட பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் 631 கிலோ மீட்டர் பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த காரின் விலை 44.95 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த காருக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த காரின் விளம்பர தூதராக நடிகர் ஷாருக்கான் உள்ளார். அறிமுக விழாவிலும் அவர் பங்கேற்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com