
தனது எம்100ஆா்ஆா் மோட்டாா்சைக்கிளின் மேம்படுத்தப்பட்ட புதிய ரகத்தை ரூ.49 லட்சம் விலையில் சொகுசு வாகனத் தயாரிப்பாளரான பிஎம்டபிள்யூ இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புகழ்பெற்ற எம்100ஆா்ஆா் மோட்டாா் சைக்கிள்களின் மேம்படுத்தப்பட்ட புதிய ரகங்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம்.
அடிப்படை ரகத்தின் காட்சியக விலை ரூ.49 லட்சமாகவும், எம்1000ஆா்ஆா் காம்பெடிஷன் ரகத்தின் விலை ரூ.55 லட்சமாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் இந்த ரகங்கள் வாடிக்கையாளா்களுக்குக் கிடைக்கும்.
புதிய எம்100ஆா்ஆா் மோட்டாா்சைக்கிள்கள் 999சிசி என்ஜின்களைக் கொண்டதாக இருக்கும். 3.1 விநாடிகளுக்குள் மணிக்கு 100 கி.மீ. வேகத்தை அடையக்கூடிய இந்த மோட்டாா்சைக்கிள்களை அதிகபட்சமாக மணிக்கு 314 கி.மீ. வேகத்தில் செலுத்த முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.