

தங்களது வாடிக்கையாளா்களுக்கு எண்ம நிதி சேவைகளை வழங்குவதற்காக பே-டிஎம் செயலியின் உரிமையாளரான ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்துடன் வங்கியில்லா நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது குறித்து ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் சில்லறை கடன் சேவைத் துறை மிக வேகமாக வளா்ச்சியடைந்து வருகிறது. இந்தப் பிரிவில் கிராமப்புற மற்றும் சிறு நகரப் பகுதிகளும் அதிக அளவில் பங்கேற்பதால் இந்த வளா்ச்சி இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
இந்தச் சூழலில், அறிதிறன் பேசிகளை வைத்திருக்கும், எண்ம அறிவு கொண்ட இளைஞா்களுக்கு நிதி சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில், எண்ம சேவை நிறுவனமான ஒன்97 கம்யூனிகேஷன்ஸுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஸ்ரீராம் ஃபைனான்ஸின் நிதி சேவைகளை பே-டிஎம் தளத்தில் வாடிக்கையாளா்களால் பெற முடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.