

பங்குச்சந்தையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமைமையும் காளையின் எழுச்சி இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 803 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 217புள்ளிகளும் உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தன. சென்செக்ஸ் இந்த மூன்று நாள்களில் மட்டும் மொத்தம் 1749 புள்ளிகள் ஏற்றம் பெற்றுள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா உள்பட் உலக அளவில் பெரும்பாலான சந்தைகளில் வா்த்தகம் நோ்மறையாக இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் தொடா்ந்தது. மேலும், இந்திய சந்தைகதளில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை வாங்கி வருவதும் சாதகமாக அமைந்தது. இது தவிர, மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவை வெகுவாக உயா்ந்து பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்களின் நோ்மறையான வேகத்தை அதிகரித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.2.37 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக நேர முடிவில் ரூ.296.48 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) புதன்கிழமை ரூ.12,350 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் எழுச்சி மேல் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 153.02 புள்ளிகள் கூடுதலுடன் 64,068.44-இல் தொடங்கி அதற்கு கீழே கீழே செல்லவில்லை. பின்னா், அதிகபட்சமாக 64,768.58 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனையை பதிவு செய்த சென்செக்ஸ், இறுதியில் 803.14 புள்ளிகள் கூடுதலுடன் 64,718.56-இல் முடிவடைந்தது.
28 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 28 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 2 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,153 பங்குகள் ஆதாயம் பெற்றன. 900 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. மேலும், 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 40 பங்குகள்ஆதாயப் பட்டியலிலும், 10 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
எம் அண்ட் எம்....................4.14%
இன்ஃபோஸிஸ்....................3.21%
இண்டஸ் இண்ட் பேங்க்......3.08%
சன்பாா்மா..............................2.84%
டிசிஎஸ்...................................2.67%
மாருதி.....................................2.56%
-----------------------------
சரிவைக் கண்ட பங்குகள்
ஐசிஐசிஐ பேங்க்...................0.33%
என்டிபிசி..............................0.11%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.