
மடிக்கக்கூடிய திரையுடன் கூடிய மேக் புக்வகை கணினியை 2026ஆம் ஆண்டு அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் பல முன்னணி மின்னணு சாதனங்களைத் தயாரித்து வருகிறது.
இந்நிலையில் மடிக்கக்கூடிய திரையுடன் கூடிய ஆப்பிள் நிறுவனத்தின் மேக் புக் கூடிய விரைவில் அறிமுகமாகவுள்ளது. ஆப்பிள் நிறுவனம் மேக் புக் எனும் மேம்பட்ட மென்பொருள் உடைய கணினியை 2006ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அதில் பல்வேறு அம்சங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டன.
மென்பொருள் சந்தையில் தற்போது மடிக்கக்கூடிய கணினிகள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில் மடிக்கக்கூடிய மேக் புக்கை தயாரிக்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
மடிக்கக்கூடிய திரைக்காக சாம்சங் அல்லது எல்ஜி நிறுவனத்துடன் ஆப்பிள் கைக்கோர்க்கவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய மேக்புக் 2025ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக 2026ஆம் ஆண்டு சந்தைக்கு கொண்டுவரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...