

புதுதில்லி: ஐ.டி. சேவை நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஜூன் காலாண்டு நிகர லாபம் 7 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் மாதத்தில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,534 கோடியாக இருந்தது. அதுவே கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் அதன் நிகர லாபம் ரூ.3,324 கோடி ஆக இருந்தது என்று நிறுவனத்தின் பங்குச் சந்தை தாக்கல் ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3,324 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.3,534 கோடியாக உள்ளது.
காலாண்டு அடிப்படையில் நிகர லாபம் 11 சதவீதம் சரிவடைந்து, ஜனவரி முதல் மார்ச் வரையான மாதங்களில் அதுவே ரூ.3,983 கோடியாக இருந்தது.
இந்நிலையில் முதல் காலாண்டில் ஹெச்சிஎல் நிறுவனமானது 18 மிகப் பெரிய ஒப்பந்தங்களையும், சேவை துறையில் 7 ஒப்பந்தங்களையும், சாப்ட்வேர் துறையில் 11 ஒப்பந்தங்களையும் வென்றுள்ளது என்று தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.