
மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தனது காம்பேக்ட் எஸ்யூவியான பிராங்க்ஸின் சிஎன்ஜி வேரியண்ட்டை ரூ.8.41 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் புதுதில்லியில் அறிமுகம் செய்துள்ளது.
சிக்மா மற்றும் டெல்டா ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளும் முறையே ரூ.8.41 லட்சம் மற்றும் ரூ.9.27 லட்சம் என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிஎன்ஜி மாடல்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது அதிகபட்சமாக 77.5 பிஎஸ் பவரையும், 28.51 கிமீ மைலேஜையும் வழங்கும்.
2010ல் நாங்கள் முதல் சிஎன்ஜி மாடலை அறிமுகப்படுத்தினோம். அன்றிலிருந்து, நாங்கள் நாட்டில் 14 லட்சத்துக்கும் அதிகமான எஸ்-சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்துள்ளோம். இது எங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் எங்கள் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கைக்கு ஒரு உண்மையான சான்றாகும் என்று சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை பிரிவின் மூத்த நிர்வாக அதிகாரியான சஷாங்க் ஸ்ரீவஸ்தவா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பிராங்க்ஸ் எஸ்-சிஎன்ஜி அதன் ஒட்டுமொத்த விற்பனையில் எஸ்-சிஎன்ஜி கார்களின் பங்கை அதிகரிக்கும் என்றும், அதே வேளையில் பசுமை இயக்கம் போர்ட்ஃபோலியோவை அது மேலும் வலுப்படுத்தும் என்று நிறுவனம் நம்பிக்கை தெரிவி்த்துள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...