
முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 3,30,609-ஆக இருந்தது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,30,609-ஆக இருந்தது. முந்தைய 2022 மே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 9 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் மொத்த விற்பனை 3,02,982-ஆக இருந்தது.
2022 மே மாதத்தில் 2,87,058-ஆக இருந்த இரு சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை கடந்த மே மாதம் 11 சதவீதம் அதிகரித்து 3,19,295-ஆக இருந்தது.
கடந்த மே மாதத்தில் இரு சக்கர வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை 2,52,690-ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டின் மே மாத விற்பனையான 1,91,482 உடன் ஒப்பிடுகையில் இது 32 சதவீதம் அதிகமாகும்.
எனினும், மதிப்பீட்டு மாதத்தில் மூன்று சக்கர வாகனங்களின் மொத்த விற்பனை 15,924-லிருந்து 11,314-ஆகவும், ஏற்றுமதி 1,10,245 -லிருந்து 76,607-ஆகவும் சரிந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...