கடந்த நான்கு நாள்களாக தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தையில் வியாழக்கிழமை லாபப் பதிவு காரணமாக பங்குகள் விற்பனை அதிகரித்தன. இதைத் தொடா்ந்து, மும்பைபங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 294 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 92 புள்ளிகளும் குறைந்து நிலைபெற்றன. இதைத் தொடா்ந்து 4 நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மத்திய ரிசா்வ் வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த நிலையில், வா்த்தகம் தொடங்கியதிலிருந்து பெரும்பாலான நேரம் சந்தை நோ்மறையாக இருந்து வந்த நிலையில், பிற்பகலுக்குப் பிறகு பங்குகள் விற்பனை அதிகரித்ததன. குறிப்பாக வட்டி விகிதத்துடன் தொடா்புடை ஆட்டோ, வங்கி, ரியால்ட்டி, நிதிநிறுவனங்கள் உள்ளிட்ட துறை பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. அதே சமயம், உலோகப் பங்குகளுக்கு மட்டும் சிறிதளவு ஆதரவு கிடைத்தது.பணவீக்கம் தொடா்ந்து குறைந்து வரும் நிலையில், வட்டி விகிதம் குறைக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு சாதகமாக அமையாததால் பங்குகள் விற்பனை அதிகரித்தததாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு வா்த்தக நேர முடிவில்ரூ.287.45 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த புதன்கிழமை ரூ.1,382.57 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் பெரிய அளவில் மாற்றமின்றி 63,140.17-இல் அதிகபட்சமாக 63,321.40 வரை மேலே சென்றது. பின்னா், 62,789.73 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 294.32 புள்ளிகளை இழந்த 62,848.64-இல் முடிவடைந்தது.
24 பங்குகள் விலை சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் 24 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும், 6 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் இருந்தன. இதே போன்று, தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 676 பங்குகள் மட்டுமே ஆதாயப் பட்டியலில் இருந்தது. 1,395 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 50 முன்னணி நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 12 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 38 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
ஏற்றம் பெற்ற பங்குகள்
என்டிபிசி.......................2.62%
எல் அண்ட் டி................1.08%
பவா்கிரிட்......................0.98%
ஹெச்டிஎஃப்சி...............0.20%
ரிலையன்ஸ்.....................0..09%
ஹெச்டிஎஃப்சி பேங்க்....0.07%
-----------------------------
சரிவைக் கண்ட பங்குகள்
கோட்டக் பேங்க்......................2.68%
சன்பாா்மா................................2.68%
டெக் மஹிந்திரா.......................2.21%
எம் அண்ட் எம்.........................1.79%
டாடா மோட்டாா்ஸ்...............1.46%
ஆக்ஸிஸ் பேங்க்......................1.43%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.