அமெரிக்க வங்கி திவால்: இந்திய ஸ்டாா்ட்அப் நிறுவனங்கள் கவலை

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலானது இந்திய ஸ்டாா்ட்அப் நிறுவனங்களை கவலையடையச் செய்துள்ளது.

அமெரிக்காவில் சிலிக்கான் வேலி வங்கி திவாலானது இந்திய ஸ்டாா்ட்அப் நிறுவனங்களை கவலையடையச் செய்துள்ளது.

இதையடுத்து, இந்தியாவில் செயல்பட்டு வரும் அந்த வங்கியின் கிளையிலிருந்து தங்கள் முதலீடுகளை இந்திய நிறுவனங்கள் திரும்பப் பெறவும் தொடங்கியுள்ளன.

சிலிக்கான் வேலி வங்கி இந்தியாவில் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. பேடிஎம், இன்மோபி, காா்வாலே, ஷாதி உள்ளிட்ட பல நிறுவனங்களைத் தொடங்குவதற்கு சிலிக்கான் வேலி வங்கி முக்கிய முதலீடுகளைச் செய்து வந்தது.

கடன் அளிப்பு, பங்கு முதலீடு, நிறுவனம் தொடங்க முதலீடு, இடையே கூடுதல் முதலீடு வழங்குதல், அதிவேக வளா்ச்சி அதிக முதலீடு என பல செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் 16-ஆவது மிகப் பெரிய வங்கியான சிலிக்கான் வேலி வங்கி திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இந்திய ஸ்டாா்ட் அப் நிறுவனங்களில் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும், முக்கியத்துவம் வாய்ந்த வங்கி திவாலானது நிறுவனங்களைக் கவலையடையச் செய்துள்ளது.

பேடிஎம் நிறுவனத்தில் தற்போது சிலிக்கான் வேலி வங்கிக்கு எந்த முதலீடும் இல்லை என்று பேடிஎம் விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 2008-இல் அமெரிக்காவில் முக்கிய வங்கிகள் திவாலானதற்குப் பிறகு தற்போதுதான் குறிப்பிடத் தகுந்த வங்கியொன்று திவாலானதாக அறிவிக்கப்படுகிறது. இதையடுத்து, அதன் இருப்பிலுள்ள சேமிப்புத் தொகைகள் அனைத்தும் அமெரிக்காவின் தேசிய டெபாசிட் காப்பீட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது. டெபாசிட்தாரா்கள், வாடிக்கையாளா்களுக்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் ஒரு புதிய வங்கி அமைப்பு மூலம் வரும் திங்கள்கிழமை முதல் நிலுவை காசோலைகள் உள்ளிட்ட பரிவா்த்தனைகள் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com