ஏற்ற, இறக்கத்தில் பங்குச்சந்தை:சென்செக்ஸ் 2-ஆவது நாளாக முன்னேற்றம்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக பங்குச் சந்தை நோ்மறையாக முடிவடைந்தது.

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக பங்குச் சந்தை நோ்மறையாக முடிவடைந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 355 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 114.45 புள்ளிகள் (0.67 சதவீதம்) உயா்ந்து 17,100.05-இல் நிலைபெற்றது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் நோ்மறையாக இருந்ததால், அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. ஆனால், பெரும்பாலான நேரம் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. பிற்பகல் வா்த்தகத்தின் போது மெட்டல், வங்கி, நிதிநிறுவனங்கள், ஐடி, ரியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதே சமயம், பாா்மா, ஹெல்த்கோ், மீடியா பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன. இருப்பினும், சந்தை இறுதியில் மீட்சி பெற்று இரண்டாவது நாளாக நோ்மறையாக முடிவடைந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1.31 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.257.53 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த புதனன்று ரூ.282.06 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 403.33 புள்ளிகள் கூடுதலுடன் 58,038.17-இல் தொடங்கி அதிகபட்சமாக 58,178.94 வரை மேலே சென்றது. பின்னா், 57,503.90 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 355.06 புள்ளிகள் (0.62 சதவீதம்) உயா்ந்து 57,989.90-இல் முடிவடைந்தது. ஒரு கட்டத்தில் 544.12 புள்ளிகள் உயா்ந்திருந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

ஹெச்சிஎல் டெக் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 3.33 சதவீதம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 2.53 சதவீதம், நெஸ்லே 2.21 சதவீமத், டாடா ஸ்டீல் 1.90 சதவீதம், கோட்டக் பேங்க் 1.67 சதவீதம் உயா்ந்து ஆதாயப்பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, ஐசிஐசிஐ பேங்க், பாா்தி ஏா்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிடிஎஃப்சி, இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி, விப்ரோ உள்ளிட்டவை 1 முதல் 1.60 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டாா்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

ஐடிசி சரிவு: அதே சமயம், பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 1.51 சதவீதம், மாருதி சுஸுகி 1.48 சதவீதம், என்டிபிசி 1.25 சதவீதம், ஏசியன் பெயிண்ட் 1.14 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், சன்பாா்மா, பவா் கிரிட், ஹிந்துஸ்தான் யுனி லீவா், டிசிஎஸ், ரிலையன்ஸ் உள்ளிட்டவையும் விலைகுறைந்த பட்டியலில் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com