
புதுதில்லி: கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 17.7 சதவீதம் சரிந்ததையடுத்து அதன் பங்குகள் சுமார் 2 சதவீதம் சரிவுடன் இன்று முடிந்தது.
மும்பை பங்குச் சந்தையில் பங்கின் விலை 1.87 சதவீதம் சரிந்து ரூ.232.90ஆக இருந்த நிலையில், மாலை வர்த்தகத்தில் மேலும் 3 சதவீதம் குறைந்து 230 ரூபாயாக வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தையில் 1.83 சதவீதம் சரிந்து ஒரு பங்கின் விலை ரூ.233.05 ஆக இருந்தது.
இன்றைய வர்த்தகத்தில் இந்நிறுவனத்தின் 3.73 லட்சம் பங்குகள் மும்பை பங்குச் சந்தையிலும் 97.11 லட்சம் பங்குகள் தேசிய பங்குச் சந்தையிலும் வர்த்தகமாயின.
உலகின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்க நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட், ஊழியர்களின் ஊதிய திருத்தத்திற்காக செய்யப்பட்ட அதிக ஒதுக்கீட்டின் காரணமாக மார்ச் காலாண்டு நிகர லாபத்தில் 17.7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,527.62 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G