
ஆப்பிள் ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு நாம் குட் பாய் சொல்லும் நிலை வருமா? ஒருவேளை குர்மன் சொல்வது சரியாக இருந்தால், ஆப்பிள் நிறுவனம், ப்ரோ மேக்ஸை அல்ட்ரா நிலைக்கு உயர்த்தலாம் அல்லது 2024ல் இதனை செயல்படுத்துவது குறித்து சிந்திக்கலாம் என்கிறார்.
ப்ளூம்பெர்க் ஆய்வாளர் மார்க் குர்மன் மற்றும் மற்றொரு ஆய்வாளர் மஜின் பியு ஆகியோர் இருவேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். குர்மன் கணித்திருப்பது என்னவென்றால், வரவிருக்கும் ஆப்பிள் ஐஃபோன் 15 எப்படி இருக்கும் என்றால்.. எளிமைப்படுத்தப்பட்ட அல்ட்ரா மாடலுடன் 6.7 இன்ச் ஐஃபோன்-ஆக இருக்கலாம். ஆனால் மஜிம் பியு சொல்வதோ ஆப்பிள் அல்ட்ரா மாடலையே கொண்டு வரும் என்று.
இதையும் படிக்க.. ஹனி-டிராப் மோசடிகளில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?
யார் சொல்வதை நம்பலாம்? இவர்கள் இருவரும் சொல்வதைக் கேட்டு அடுத்த ஆப்பிள் ஐஃபோன் 15 மாடலை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு சற்று குழப்பமே நேரிடும்.
மஜின் பியு என்ன நினைக்கிறார் என்றால்.. ஐஃபோன் 15 அல்ட்ரா மாடல் சாதாரண ஒரு மாடலாக இருக்காது..
1. 8 ஜிபி ராம் - கிட்டத்தட்ட இது ஒரு சிறிய வகை கணினி போல உங்கள் பாக்கெட்டுக்குள் இருக்கும்.
2. 2டிபி ஸ்டோரேஜ் - ஒட்டுமொத்த புகைப்படத் தொகுப்புகளையும் கூட வைத்துக் கொள்ளலாம்.
3. சிறந்த கேமராக்கள் - ஏனென்றால், நமக்கு மிகச் சிறந்த அல்ட்ரா - லீஷியஸ் செல்ஃபிக்கள் வேண்டுமே என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், மார்க் குர்மன் இவ்வாறு தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார், ஒரே ஒரு புதிய ஹை-என்ட் 6.7 இன்ச் ஐஃபோன் மட்டுமே அறிமுகமாக உள்ளது. இந்த ஆண்டு ப்ரோ மேக்ஸ் மற்றும் அல்ட்ரா என இரண்டும் இருக்காது. பிப்ரவரியில் நான் எழுதியது போல் அடுத்த ஆண்டு இவை அறிமுகமாகலாம்.
Based on the information I was able to obtain, we could see changes in the lineup of the new iPhone 15. Apple could present a version called iPhone 15 Pro Max with 6GB of RAM and storage up to 1TB and another version called 15 Ultra with 8GB of RAM, memory up to 2TB and a much… pic.twitter.com/EIr3QjhPm9
— Majin Bu (@MajinBuOfficial) September 1, 2023
ஆனால் எதுவும் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால், ப்ரோ மேக்ஸ் மற்றும் அல்ட்ரா மட்டும் இல்லை என்று தெரிகிறது. நான்கு மாடல்கள் மொத்தமாக இருக்கும்.. ஆப்பிள் ஐஃபோன் 15, 15 பிளஸ், ப்ரோ, பிக்கர் ப்ரோ என்பதாக இருக்கலாம் என்று மார்க் கர்மன் பதிவு செய்திருக்கிறார்.
இவர் இப்படிச் சொல்ல மஜின் பியு தொடர்ச்சியான தனது பதிவில்,
நான் பெற்ற தகவலின் அடிப்படையில், புதிய ஐஃபோன் 15 (iPhone 15)-ன் வரிசையில் மாற்றங்களைக் காணலாம். ஆப்பிள் ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் என்ற மாடலை 6ஜிபி ராம் மற்றும் 1டிபி வரை சேமிப்பகத்துடன் வழங்க முடியும் மற்றும் 15 அல்ட்ரா எனப்படும் மற்றொரு பதிப்பை 8ஜிபி ராம், 2டிபி வரை மெமரி மற்றும் சாதாரண ப்ரோவை விட சிறந்த கேமரா அம்சங்கள் கொண்டதாக இருக்கலாம். ஐஃபோன் 15 அல்ட்ரா விலை மேலும் சுமார் 100 டாலர்கள் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் சில உற்பத்தியாளர்களோ ப்ரோ மேக்ஸ் அல்ட்ரா வேறு மாதிரியாக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். இந்த ஆண்டு ப்ரோ மேக்ஸ் சிறந்த மாடலாக இருக்காது எனவும் கருதுகிறார்கள்.
There’s only one new high-end 6.7 inch iPhone. No Pro Max and Ultra this year. Perhaps next year as I wrote in February. https://t.co/mSVCEotmtG https://t.co/OGrU2l3iKn
— Mark Gurman (@markgurman) September 2, 2023
இரண்டு 6.7 அங்குல வெவ்வேறு மாடல்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்பதை நான் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்கிறேன், ஆனால் இரண்டும் உண்மையில் வெளியிடப்படும் என்று நான் நினைக்கவில்லை என்று மஜின் பியு தெரிவித்துள்ளார்.
ஐபோன் 15 பெயர்கள் குறித்து கேஸ் மார்க்கர்களுக்கும் உறுதியாக தெரியவில்லை என்றே தெரிகிறது. எனவே அவை "அல்ட்ரா" மற்றும் "ப்ரோ மேக்ஸ்" உள்ளிட்ட அனைத்து சாத்தியமான பெயர்களையும் உள்ளிட்டுள்ளன, இரண்டு தனித்தனி மாடல்கள் உள்ளன என்பதை மட்டுமே இது விளக்குகிறது. தனிப்பட்ட முறையில், நான் சொன்னது போல், அல்ட்ரா மாடலின் சிறப்பியல்புகளுடன் ஒரே ஒரு ஐபோன் ப்ரோ மேக்ஸ் மட்டுமே இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...